பெண்களை ஏற்றாமல் சென்ற பேருந்து ஓட்டுனருக்கு மிரட்டல்..!
குமரியில் பெண்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் நாகர்கோயிலில் இருந்து கூட்டத்துறை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
காரில் வந்து வழிமறித்த இளைஞர்கள் அரசு பேருந்துகளில் பெண்களை ஏன் ஏற்றவில்லை என்றும், உங்கள் வீட்டு பெண்கள் என்றால் நிறுத்தாமல் செல்வீர்களா எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும் வேலை இல்லாமல் செய்து விடுவேன் என ஓட்டுனருக்கு மிரட்டல் விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.





