மின்கம்பி மீது உரசிய பேருந்து..துடிதுடித்து இறந்த ஓட்டுனர்..!
கோத்தகிரி அருகே அரசு பேருந்து மீது மின்சார கம்பி உரசியதால் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரசு பேருந்து சென்ற பொழுது சாலையில் தாழ்வான நிலையில் இருந்த மின்கம்பியின் மீது உரசி ஓட்டுநர் பிரதீப் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. மின் இணைப்பைத் துண்டித்து ஓட்டுனரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்.






