வராக நதி அருகே கிடந்த தாய், மகன் சடலம்..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வராக நதிக்கரை ஓரத்தில் தாயுடன் மகனும் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் கர்நாடகாவை சேர்ந்த தேவி மற்றும் அவரது மகனான 14 வயது சிறுவன் ராகுல் என்பவனும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
அருகில் உள்ள சேவலை கிராமத்தில் கோயில் திருவிழாவிற்கு இருவரும் பலியானதாக கூறப்படும் நிலையில் இருவரும் கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






