அசுர வேகத்தில் நேருக்கு நேர் மோதிய பேருந்து..!
பல்லடம் அருகே கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊழியர்களுடன் சென்ற தனியார் நிறுவன பேருந்து மீது மற்றொரு தனியார் பேருந்து மோதிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் இருபத்துக்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் உயர் தப்பியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செமி பாளையத்தில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவன பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி 20 பயணிடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவன பேருந்தின் மீது கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பனியன் நிறுவன ஊழியர்களை ஏற்றுக் கொண்டு வந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அவர்கள் இன்று காயங்களுடன் உயிர் தப்பினர்.





