காவலரை முட்டி தூக்கி வீசிய காளை..!
டெல்லியில் சாலையோரம் நின்ற காவலரை காளை ஒன்று அனாயசமாக குத்தி தூக்கி வீசும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தயல்பூர் நகரில் சாலையை கடந்த காவலர் ஒருவர் சாலையோரம் நின்று செல்போனில் எதையோ படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த வழியாக வந்த காளை திடீரென வந்த வேகத்தில் காவலரை முட்டி தூக்கி வீசியது. பின்பு இயல்பு நிலைக்கு திரும்பிய காளை சாதுவாக சாலையை கடந்து சென்றது. லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதன் சிசிடிவி காட்சி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.





