திருமண மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்..!
கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது மூளைச்சாவு ஏற்பட்டு மணமகள் உயிரிழந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கியுள்ளனர். கோலார் அடுத்த சீனிவாசப்பூரை சேர்ந்த சித்ரா என்ற அந்தப் பெண்ணுக்கு கடந்த 7ஆம் தேதி காலை திருமணம் நடைபெற இருந்தது.
முந்தைய நாளான ஆறாம் தேதி மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. உறவினர் ஒவ்வொருவராகச் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தபோதே திடீரென சித்ரா மேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளைச்சாவு காரணமாக இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதை கேட்டு அவரது பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர்.
திருமண நாளன்று மகள் இறந்த தூக்கத்திலும் அவரது பெற்றோர் மகளின் உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். இதுபற்றி அறிந்த கர்நாடக அமைச்சர் சித்ராவுக்கு இது மிக முக்கியமான நாள் ஆனால் விதி வேறு மாதிரியாக விளையாடிவிட்டது.
இந்த சோகத்திலும் அவரது பெற்றோர்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முடிவு செய்திருப்பது பெரிது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.





