சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட சிறுவன்..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு துணி எடுப்பதற்காக பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளி கடைசெல்வதற்காக சாலையை கடந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் 8 வயது சிறுவனை மோதிய சிசிடிவி காட்சிகளை வைத்து போதை ஆசாமியை தேடி வருகின்றனர்.






