வாயால் செருப்பை கடித்து எடுத்து வர சொன்ன முதலாளி..!
சம்பளம் கேட்ட ஊழியரிடம் தனது காலணியை வாயால் கவ்வி எடுத்து செல்ல கட்டாயப்படுத்திய புகாருக்குள்ளான பெண் தொழிலதிபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஊழியரை தனது காலணியை வாயால் கவ்வி எடுத்து செல்ல கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






