--- --:--:-- --

பிரீ பையர் கேம் – ஆல் நடந்த தகராறு..!

5

ன்லைனில் free fire கேம் விளையாடிய போது தகராறு ஏற்பட்டு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 9 பேரை கைது செய்திருக்கின்றனர்.

 

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்த கங்காளன் குளத்தில் இயங்கிவரும் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். ஆன்லைனில் ஃப்ரீ ஃபயர் விளையாடிய பொழுது ஏற்பட்ட தகராறில் இருதரப்பு மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் சிலர் காயமடைந்தனர்.

 

புகாரின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கல்லூரி மாணவர்கள் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் இரு தரப்பையும் சேர்ந்த 9 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon