அமைச்சர் பியூஷ் கோயலை தமிழ்நாட்டில் களம் இறக்கிய பாஜக..!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான பணிகளில் மாநில மற்றும் தேசிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர்களாக 3 மத்திய அமைச்சர்களை நியமித்துள்ளது. இதன்படி, தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இணை பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேஹ்வால், முரளிதர் மோஹல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக, பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாஜகவை தேர்தலுக்கு தயார்படுத்துவதற்கும், தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கும் இந்த நியமனங்கள் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.இதற்கு முன்னதாக, பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணைத் தலைவர் பைஜெயந்த் பாண்டாவும், இணை பொறுப்பாளராக முரளிதர் மோஹலும் அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பைஜெயந்த் பாண்டாவுக்குப் பதிலாக பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலின்போது பியூஷ் கோயல் தமிழ்நாட்டின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






