--- --:--:-- --

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை..!

1

டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும்நிலையில், இன்று ஒரே நாளில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி ஒரே நாளில் ஆபரணத்தங்கத்தின் விலை 2 முறை உயர்ந்த நிலையில் தொடர்ந்து 13ஆம் தேதி அதே விலையே நீடித்தது.

 

அதன்படி டிச.13ஆம் தேதி சனிக்கிழமை 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.12,370க்கும், ஒரு சவரன் ரூ.98,960க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (டிச.15ம் தேதி) காலை ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு, கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.12,460க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இந்நிலையில் தற்போது மாலை வேளையில், ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120க்கும், கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதேபோல் 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.83,520க்கும், ஒரு கிராம் ரூ.10,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.2,15,000, கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.215க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon