தர்பார் படத்தின் 4 நாள் வசூல் சுமார் ரூ.150 கோடி என தகவல்
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் சேர்த்து நான்கு நாட்களில் சுமார் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 9ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் நான்கு நாட்களில் சென்னையில் மட்டும் சுமார் 7 கோடி ரூபாயுடன் வசூலித்துள்ளது.
மேலும் தமிழகத்தின் இதர பகுதிகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா , தெலுங்கானா மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் வசூலை குவித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் வெளிநாடுகளிலும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ஹிந்தி படங்களை பின்னுக்குத்தள்ளி தர்பார் முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில்தான் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சினிமா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.





