--- --:--:-- --

விமான நிலையங்களை தாக்க பயங்கரவாதிகள் சதி! உளவுத்துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு!!

Terrorist 02

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமான தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவலால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பகுதியில், பயங்கரவாதிகள் அவ்வப்போது ஊருவி, தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவமும் இதற்கு தரப்பிலும் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் பயங்கரவாதிகளின் அட்டூழியம் குறைந்தபாடில்லை.

 

இந்நிலையில், ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமானப்படை தளங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து, விமானப்படை தளத்திற்குள்ளும், அதனை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon