மருத்துவ கிடங்கில் பயங்கர தீ விபத்து..!
சென்னை புளியந்தோப்பில் மருத்துவ கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான மருந்து பொருட்கள் எரிந்து சேதமாகின. மக்கள் மருந்தகத்திற்கு மொத்தமாக மருந்து பொருட்களை அனுப்பி வரும் அரவிந்த் குமார் என்பவரது குடோனில் தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த 3 தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். புகை வந்தவுடன் உள்ளிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.






