--- --:--:-- --

நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை படுகொலை..!

7

திண்டுக்கல்லில் நண்பரின் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்த நகரை சேர்ந்த பிரபாகரன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

 

இவர் நண்பரின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் பிரபாகரனை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளது.

 

இதில் படுகாயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார் குற்றவாளிகள் 5 பேரை பிடித்தனர்.

 

Right Menu Icon