மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை! மகளுடன் உறவு வைத்தால் ஆயுள் நீளும்!
சென்னை அருகே சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆவடியை சேர்ந்த அருள் என்பவன் தனது 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சிறுமியின் வீட்டுக்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த அருள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை கொல்லி மலைக்கு சென்று தியானம் செய்வதும், கடந்த 24ம் தேதி தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.
விசாரணைக்கு பிறகு மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் அளித்து கொல்லிமலையில் இருந்து அருளை வரவழைத்த போலீசார் உடனடியாக கைது செய்தனர். மகளிடம் உறவு வைத்துக்கொண்டால் தனது ஆயுள் நீடிக்கும் என்பதால் அவ்வாறு நடந்து கொண்டதாக அருள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






