--- --:--:-- --

தற்காலிக பணி நியமனங்களை நிரந்தரப்படுத்தமுடியாது – மா.சுப்பிரமணியன்

6

ரசு ஊழியர்களின் போராட்டத்தை பற்றி நான் சொல்லவில்லை. தற்காலிக பணி நியமனங்கள் என்பது 11 மாதகால வேலை அடிப்படையில் வருவார்கள். இவர்கள் வேலைக்கு வரும்போது கம்யூனல் ரொட்டேஷன், சான்றிதழ் சரிபார்ப்பு போன்று எதுவும் இருக்காது.

 

இவர்களை நிரந்தரப்படுத்தவும் முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் இவர்களை நிரந்தரப்படுத்த முடியாது. நிரந்தரப்படுத்தினால் நீதிமன்றம் தலையிடும். இதைத் தெரிந்துகொண்டே ஒருசிலரால் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தப்படுகிறது.

 

அரசு ஊழியர்களின் போராட்டத்தையும், ஊழியர் சங்க போராட்டத்தையும் பற்றி நான் சொல்லவில்லை. ‘தேர்தல் வரும் காரணத்திற்காகவே தற்காலிக பணியாளர்கள் பணிநிரந்தம் கோரி போராடுவது பேஷன் ஆகிவிட்டது’ என்று மா.சுப்பிரமணியன் கூறியதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

Right Menu Icon