ஆசிரியர்களை கேலி கிண்டல் செய்வதாக தலைமையாசிரியர் போலீசில் புகார்..!
சென்னை திருவொற்றியூரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு பள்ளி மாணவர்கள் மீது தலைமை ஆசிரியர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். ஆசிரியர்களை கேலி கிண்டல் செய்வதாகவும், ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிகள் ,பெண் ஆசிரியர்கள் பாத்ரூம்க்கு செல்லும்போது வெளிப்புற கதவை பூட்டி வருவதாகவும் போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்கள் மீதான தலைமையாசிரியரின் புகார் தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





