டாஸ்மாக் கடைகள் நாளை இயங்காது!
நபிகள் நாயகம் பிறந்த தினமான நாளை(செப்.5) மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக்(TASMAC) கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களில் நாளை மது விற்பனை செய்யக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.
விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





