அக்டோபர் 14-ல் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி காலை 9:30 கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி காலை 9:30 கூடுகிறது.
மேலும் அன்றைய தினம் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைமுக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர் மறுமை குறித்து இரங்கல் குறிப்பு தெரிவிக்கப்படும். அதேபோல் அன்றைய தினம் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.
அலுவலக கூட்டம் பேரவை கூடுவதற்கு முன்னர் ஒரு நாள் அலுவல் ஆய்வு கூடி கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.” என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நிறைவுபெற்றுள்ளது.
அரசியலில் வாக்கு வாங்கிதானே சபாநாயகராக மாறி உள்ளோம். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 14 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட உள்ளது.” என்று தெரிவித்துள்ளது.






