--- --:--:-- --

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!

3

மிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் காலை  கூட்டம் தொடங்குகிறது. அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அது தொடர்பாக இன்று அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

 

ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கையை பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் ஆன்லைன் போராட்டத்திற்கு தடை விதிப்பதற்கான சட்ட மசோதா உள்ளிட்டவைகள் பற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

தமிழ்நாட்டில் புதிய தொழில்களுக்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

 

Right Menu Icon