--- --:--:-- --

மும்பையில் அடுத்தடுத்து 7 வீடுகள் சரிந்து விழுந்து விபத்து..!

2

மும்பையில் அடுத்தடுத்து ஏழு வீடுகள் சீட்டுக் கட்டுகள் போல சரிந்து விழுந்தன. இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் கால்வாய் கரையில் ஏராளமான வீடுகள் அமைந்துள்ளன. நேற்றிரவு இவற்றில் ஏழு வீடுகள் அடுத்தடுத்த இடிந்து விழுந்தன.

 

சீட்டுகளை போல அந்த வீடுகள் ஒவ்வொன்றாக சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

விபத்து நேரிட்ட பகுதியை சேர்ந்த 25க்கும் அதிகமான வீடுகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் பயணிகளின் பொழுது ஏற்பட்ட சக்தி வாய்ந்த அதிர்வு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்து இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

 

Right Menu Icon