திருப்பூரில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்..!
திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் 12 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்து திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் கிறிஸ்துராஜ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வந்த மயில்சாமி திருப்பூர் தெற்கு தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் தெற்கு தாசில்தார் மோகன் காங்கேயத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.






