--- --:--:-- --

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

5

னையூர் அலுவலகத்தில் த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயை முதல்வராக ஏற்பவருடன் கூட்டணி அமைக்கப்படும் என்று நிர்வாகிகள் உறுதி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று (டிச.11) நடைபெற்றது.

 

பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற, இந்த கூட்டத்தில், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், த.வெ.க இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன், தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், பொருளாளர் வெங்கட்ராமன், பரப்புரைச் செயலாளர் நாஞ்சி சம்பத், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டத்தில் கூட்டத்தில், விஜய்யின் அடுத்தடுத்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், த.வெ.க தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமையை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம் என்றும் த.வெ.க கூட்டணி குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்க, விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தாகவல் வெளியாகியுள்ளது.

 

அதுமட்டுமல்லாமல், டிசம்பர் 17 அன்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் விதமாக பா.ம.க செய்தித் தொடர்பாளர் கே. பாலு, த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட தலைவர்களை கட்சி தலைமையகத்தில் சந்தித்து அழைப்பு விட்டுத்துள்ளார்.

 

2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க, நாம் தமிழர் கட்சி உட்பட பல கட்சிகள் போட்டிப்போடவுள்ளன. இந்நிலையில், த.வெ.க இதுவரை எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon