திட்டுவது தற்கொலை தூண்டுதல் ஆகாது – உச்சநீதிமன்றம்
ஒரு புகாரின் அடிப்படையில் ஆசிரியர் திட்டியதால், மாணவன் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு துயரம் நடக்கும் என்று, எந்த சாதாரண மனிதனும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது.
மாணவனைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஆசிரியர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






