செயலி வாயிலாக பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செல்போன் செயலி வாயிலாக பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் மிரட்டப்பட்ட நபர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சதீஷ்குமார் என்பவர் செயலிகள் மூலம் பல லட்சம் கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து கடன் வாங்கியவர்கள் மிரட்டியதுடன் அவரது படத்தை தவறாக சித்தரித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் தங்கும் விடுதியில் குடும்பத்துடன் தங்கி அங்கு ஐந்து வயது மகனை தூக்க மாத்திரைகளை உட்கொள்ள வைத்து மனைவியுடன் சேர்ந்து அவரும் அதை உட் கொண்டுள்ளார். இதுகுறித்து தம்பிக்கு சுரேஷ் தெரிவித்த நிலையில் அவர் உடனே அங்கு விரைந்து மயங்கிய நிலையில் இருந்த மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்தார்.






