--- --:--:-- --

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

6

மிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

 

நாகூர், வேளாங்கண்ணி இளையோர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையிலிருந்து இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு நல்ல விளைச்சல் அடைந்துள்ள நிலையில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்கள் பாதிக்கும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

Right Menu Icon