திடீரென பயங்கர சப்தம்.. சம்பவ இடத்திலே உடல் கருகி பலி..!
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி சட்டத்தை கேட்ட கிராம மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.
இதில் கண்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சட்ட விரோதமாக பட்டாசு ஆலை நடத்திய மகேஸ்வரன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





