குடும்பத் தகராறில் கணவர் மீது சூடான எண்ணெய் ஊற்றிய மனைவி..!
உசிலம்பட்டி அருகே குடும்பத்தகராறில் கணவர் மீது சூடான எண்ணெயை ஊற்றிய மனைவி தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூர் கிராமத்திற்கு சென்ற தம்பதி, விவசாயிகளான இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
இதே போல சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் கணவர் மீது சூடான எண்ணெயை ஊற்றிய அவர் தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியில் ஏற்படுகிறது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றிலிருந்து மனைவியையும், சூடான எண்ணெய் ஊற்றியதால் காயமடைந்தவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





