--- --:--:-- --

விமானத்தில் திடீரென கோளாறு – 2 மணி நேரம் காத்திருந்த ரஜினிகாந்த்

2

கர்நாடகாவில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் பொருட்டு நடிகர் ரஜினிகாந்த் செல்லவிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.

 

மைசூருக்கு அடுத்து உள்ள பந்திப்பூர் மத்திய அரசு நடத்தும் வனப்பாதுகாப்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது இளைய மகள் சௌந்தர்யா உடன் இன்று காலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் ட்ருஜெட் விமானத்தில் ஏறினார்.

 

விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த பொறியாளர்கள் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரண்டு மணி நேரம் கால தாமதம் ஆன நிலையில் அதுவரை விமானத்திலேயே ரஜினிகாந்த் காத்திருந்தார்.

 

பின்னர் 8.30 மணி அளவில் கோளாறு சரி செய்யப்பட்டு பிறகு ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Right Menu Icon