--- --:--:-- --

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தின், அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்

16

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

குத்தடி பகுதியைச் சேர்ந்த மெய்யப்பன் என்பவர் ஆறுமுகம் என்பவரோடு காரைக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். வேலங்குடி பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடக்க முயன்ற போது மின்னல் வேகத்தில் வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

 

இதில் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆறுமுகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

குறுகிய சாலையில் அரசு பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டது விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் கூறினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon