ஹிஜாபை அகற்றி விட்டு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள்..!
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது.
கர்நாடக மாநிலம் அரசு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சீருடை கட்டாயம் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்த போதிலும் தேர்வுக்குச் செல்லும் பொழுது ஹிஜாப் அகற்றிவிட்டு தேர்வு எழுத சென்றனர்.






