வரும் 31 ஆம் தேதி பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
துபாயில் 4 நாள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்ப முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்வது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் 31ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கான திட்டங்கள், நீட் வழக்கு மசோதா, மேகதாது பிரச்சனை ஆகியவை குறித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது.






