ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 25ம் தேதி வரை விடுமுறை..!
புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் வரும் 25ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 50 விழுக்காட்டினர் சிறுவர்களாக இருப்பதாக கூறிய மாநில சுகாதாரத்துறை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறிது காலம் விடுப்பு வழங்க பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதனை ஏற்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்றிலிருந்து வரும் 25ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




