ஆபத்தை உணராமல் அரசு பேருந்தில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆபத்தை உணராமல் அரசு பேருந்தில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
கண்ணமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து கொளத்தூர் மார்க்கமாக செல்லும் அரசு பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படிக்கட்டு மற்றும் ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்து அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
விபத்து ஏற்படாமல் தடுக்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுமெனவும் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






