--- --:--:-- --

மீண்டும் இணையும் அசுரன் கூட்டணி..!

11

சுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்திருந்தார் கருணாசின் மகன். தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி வைத்துள்ளார். நடிகர் தனுஷின் நாற்பத்தி நான்காவது படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

 

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர், நித்யாமேனன் ராசிகன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் நடிகர் கருணாசின் மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

படப்பிடிப்பு தளத்தில் கருணாஸ் உடன் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Right Menu Icon