--- --:--:-- --

அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள சோமஸ்கந்தர் சிலையை மீட்க நடவடிக்கை..!

3

மெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோமாஸ் ஸ்கந்தர் உருவ சிலை விரைவில் மீட்கப்படும் என சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்யப்பட்ட தலைமை வாய்ந்த சிலைகளை கண்டறிந்து அதனை நீக்கும் பணியை செய்து வருகின்றனர்.

 

அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ அருங்காட்சியகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சோமாஸ் கந்தர் உளவு சிலர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வெண்கல சிலை சர்வதேச சந்தையில் 8 கோடி ரூபாய் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

 

காஞ்சிபுரம் கோவிலுக்கு சொந்தமான இந்த சிலை தமிழகத்தை சேர்ந்த நபர்கள் மூலமாக அமெரிக்காவில் உள்ள நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை மீட்டு வருவதற்கான பணிகள் தற்பொழுது தொடங்கியுள்ளது.

 

Right Menu Icon