--- --:--:-- --

உள்ளாட்சி தேர்தல் எப்போது..? – மாநில தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை!!

images

உள்ளாட்சித் தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக மாநில தேர்தல் ஆணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

 

தமிழகத்தில் அடுத்த மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க, மாநில தேர்தல் ஆணையம் விறுவிறுப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தேர்தலை நடத்துவது தொடர்பான பணிகள் குறித்து தென் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன், மதுரை, சிவகங்கை ஆகிய இடங்களில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி 2 நாட்கள் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

 

இதைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆணைய செயலராக புதிதாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி சுப்பிரமணியம் உள்பட ஆணையத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

 

இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு, தேர்தல் தேதியை முடிவு செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க, உச்ச நீதிமன்றத்தில் 4 வார அவகாசம் கேட்டிருந்தது தேர்தல் ஆணையம் . அதன்படி அடுத்த வாரத்திற்குள் இந்த அவகாசம் முடிவடைகிறது. எனவே வரும் 24-ந் தேதி தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் எனவும், டிசம்பர் 27, 28 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

Leave a Reply

Right Menu Icon