நீதிமன்றம் மூலம் பொங்கல் பரிசை தடுக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார்..!
நீதிமன்றம் மூலம் பொங்கல் பரிசை தடுக்க திமுக தலைவர் மு க ஸ்டாலின் முயற்சி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி மாவட்டம் முசிறியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டவர் அதிமுக ஆட்சி நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.
கல்வியில் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும் பொருளாதாரத்தில் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் முதலீடுகளை அரசு ஈர்த்து உள்ளதாகவும் கூறினார் .
தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றி வருவதாகவும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். பொங்கல் பரிசை தடுக்க திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.







