--- --:--:-- --

நடிகர் ரஜினிகாந்திடம் தேர்தலில் ஆதரவு கேட்பேன்..!

7

டிகர் ரஜினிகாந்திடம் தேர்தலில் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கிறார். புதுக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கமலஹாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

 

அப்போது ரஜினி அரசியல் விலகல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ரஜினியின் நலன் விரும்பிகளில் தாமும் ஒருவர் என்றும் தெரிவித்தார். ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

வரும் ஜனவரியில் கூட்டணி தொடர்பாக அறிவிப்பை நேற்று தெரிவித்தார். ஆன்மீகத்தையும், பகுத்தறிவையும் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்த முடியாது என்றும், அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.

 

ஆன்மிகத்திற்கும், தமக்கும் விரோதம் எதுவும் கிடையாது என்று கூறியவர் திராவிடம் அனைவருக்கும் சொந்தமானது என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon