--- --:--:-- --

“அந்தப் பயம் இருக்கட்டும்” – பாஜக ட்வீட் குறித்து ஸ்டாலின் கருத்து

02

பெரியார் மரணித்த பிறகும் பாரதிய ஜனதா கட்சியை மருள வைத்துள்ளார் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

 

தந்தை பெரியார் குறித்து இழிவாக ட்விட்டரில் பதிவிட்ட தமிழக பாரதிய ஜனதாக் கட்சியும் பின்னர் அதனை நீக்கியது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தை பதிவு செய்து எதிர்ப்பு வந்ததும் நீக்கிய தமிழக பாஜக அப்பதிவை போடுவதற்கு முன்பே யோசித்து இருக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த பயம் இருக்கட்டும் மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார் என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் அதிமுக இதற்காவது புலியாக பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா? என்ற கேள்வியையும் முன்வைத்திருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon