--- --:--:-- --

கொன்று விடுவேன் என நடிகை சரண்யா மிரட்டியதாக ஸ்ரீதேவி புகார்..!

9

டிகை சரண்யா பொன்வண்ணன் தமிழ் படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருபவர். படங்களில் சாந்தமான வேடங்களில் நடித்துவரும் சரண்யா, தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

நடிகை சரண்யா விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். இவர் வீட்டு அருகே ஸ்ரீதேவி என்பவர் வசித்து வருகிறார். நடிகை சரண்யா ஸ்ரீதேவி வீட்டருகே காரை நிறுத்தி வைத்துள்ளார். அப்பொழுது ஸ்ரீதேவி தனது வீட்டின் கேட்டை திறந்து உள்ளார்.

 

வீட்டின் கேட் கார் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த சரண்யா தன் கணவர் பொன்வண்ணனுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சரண்யா மீது கொலை மிரட்டல் விடுத்ததாக விருகம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon