--- --:--:-- --

அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் தலைப்பில் பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒன்றிய பொறுப்பாளர் அறிவரசு தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் !!!

5

ண்மையில் நடைபெற்ற தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துகளில் கிராம சபை மற்றும் வார்டு கூட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

 

அதன் ஒருபகுதியாக கோவை வடக்கு பெரியநாயக்கன்பாளையம் தெக்குப்பாளையம் மற்றும் நெ.2 கூடலூர் பேரூராட்சி திமுக சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் அறிவரசு தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஆளும் அ.தி.மு.க.அரசின் நிர்வாக சீர்கேடு குறித்து பொதுமக்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே எடுத்து கூறப்பட்டது.

 

மேலும்,பொதுமக்களிடம் அந்த பகுதி பொதுமக்களிடம் வளர்ச்சித்திட்டப்பணிகள் மற்றும் குறைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.பின்னர்,சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களின் குறைகள் குறித்து நேரடியாகவும் விசாரிக்கப்பட்டு,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குறைகள் தீர்த்து வைக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

மேலும்,தமிழக அரசின் தோல்விகள் குறித்தும், அ.தி. மு.க.வை.நிராகரிக்கிறோம் எனும் தலைப்பில் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.இன்று துவங்கி 10 நாட்களுக்கு கிராமங்கள் மற்றும் வார்டுகளில் 16 ஆயிரம் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அகில் சந்திரசேகர்,கிரி,துணைச்செயலாளர் முருகானந்தம்,நகர செயலாளர்கள் வீரபாண்டி ஊராட்சி முன்னான் துணைத்தலைவர் ராஜேந்திரன், கனகராஜ்,சுரேஷ்,முருகேசன்,லோகநாதன்,செந்தில்,ரதி ராஜேந்திரன்,சரோஜினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon