ஊழியரின் காலை சுற்றிய பாம்பு..!
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் பேரிடர் காலக்கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு மையத்தில் ஊழியர்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்பொழுது அருண் என்ற ஊழியர் தன் காலில் திடீரென பூச்சி ஊறுவது போன்று உணர்ந்துள்ளார். காலை பார்த்த பொழுது காலில் பாம்பு சுற்றி இருப்பதைக் கண்டு பதறிப் போனார்.
காலை உதறியதால் பாம்பு தரையில் விழுந்து ஓடியுள்ளது. பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து பாம்பை பிடித்தனர். சுமார் இரண்டு அடி நீளம் கொண்ட அந்த பாம்பு கட்டுவிரியனை சேர்ந்தது





