--- --:--:-- --

பாலியல் புகாருக்கு ஆளாகிய சிவசங்கர் பாபாவிற்கு மாரடைப்பு..!

5

பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள சிவசங்கர் பாபாவிற்கு நெஞ்சுவலி என பள்ளி நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

சென்னை கேளம்பாக்கத்தில் அடுத்து இருக்கக்கூடிய சுசில்ஹரி பள்ளியின் நிர்வாகி சிவசங்கர் பாபா தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டு பள்ளியில் தங்கி பயின்று வரக்கூடிய பல மாணவிகள் அங்கு இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

அதனடிப்படையில் மேலும் புகார்கள் வந்ததால் இன்று சிவசங்கர் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் இவர் ஆஜராகவில்லை.

 

ஏன் ஆகவில்லை என்ற கேள்விக்கு தற்போது சென்னையில் கேளம்பாக்கத்தில் இருக்கக்கூடிய வீட்டில் இல்லை என்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருப்பதாகவும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon