--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

6

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கீழ் காற்றில் ஏற்பட்ட சுழற்சியால் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வடகிழக்கு திசையில் இருந்து வரும் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும். எனவே குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon