கடுமையாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை..!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
அணு ஆயுத ஒப்பந்தத்தில் 10 நாட்களில் கையெழுத்திட வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா கெடு விதித்துள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளின் அருகே தனது படைகளையும் அமெரிக்கா தயார் நிலையில் வைத்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் வளைகுடாவில் ரஷ்யாவுடன் இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
சர்வதேச நாடுகளுக்கு ஹார்முஸ் நீரினை வழியாகவே கச்சா எண்ணெய் விநியோகம் நடைபெறுகிறது. இந்த நிலையில், போர் பதற்றம் அதிகரிக்கும் சூழலில் அந்த வழியாக வணிகம் நடப்பது பாதிக்கப்படும்
.
இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் அந்த வழியாகவே கொண்டு வரப்படுகிறது. இந்த சூழல்களால், கச்சா எண்ணெய் விலை 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்திய commodity சந்தையான MCX-ல் ஒரு பேரல் விலை 6,500 ரூபாயாக உயர்ந்து வர்த்தகமானது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




