ஜே.இ.இ முதன்மை தேர்வு விடைக்குறிப்புகள்வெளியீடு..!
தேசிய தேர்வு முகமை (NTA), பிப்ரவரி 19 அன்று ஜே.இ.இ (JEE) முதன்மை தேர்வு 2026 ஜனவரி அமர்வு இரண்டாம் தாளுக்கான விடைக்குறிப்புகள் மற்றும் விடைத்தாள்களை வெளியிட்டது. கூட்டு நுழைவுத் தேர்வு முதன்மை தேர்வு விடைக்குறிப்பின் பி.ஆர்க் அல்லது பி.பிளானிங் (B.Arch/ B.Planning) விடைக்குறிப்புகளுக்கு எதிராக ஆட்சேபனைகளை எழுப்புவதற்கான வாய்ப்பையும் தேசிய தேர்வு முகமை வழங்கியுள்ளது.
ஜே.இ.இ முதன்மை தேர்வு 2026 விடைக்குறிப்புகள் மற்றும் தேர்வர்களின் விடைத்தாள்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான nta.ac.in மற்றும் jeemain.nta.nic.in மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் (இரவு 11.50 மணி வரை) விண்ணப்பதாரர்கள் விடைக்குறிப்புக்கு எதிராக ஆட்சேபனைகளை தெரிவிக்க முடியும்.
ஆட்சேபனை செய்யப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் ரூ.200 திரும்பப் பெற முடியாத செயலாக்கக் கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர்கள் எழுப்பும் குறைகளைக் கருத்தில் கொண்ட பிறகு இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும்.
விடைக்குறிப்புக்கு எதிரான ஆட்சேபனைகள் சரியானவை எனக் கண்டறியப்பட்டால், ஜே.இ.இ முதன்மை 2026 ஜனவரி தேர்வு விடைக்குறிப்பு திருத்தப்பட்டு, அதற்கேற்ப அனைத்து விண்ணப்பதாரர்களின் பதிலிலும் பயன்படுத்தப்படும். திருத்தப்பட்ட இறுதி விடைக்குறிப்புகளின் அடிப்படையில், தேர்வு முடிவு தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
எந்தவொரு தனிப்பட்ட விண்ணப்பதாரருக்கும் அவரது ஆட்சேபனையை ஏற்றுக்கொள்வது/ஏற்காதது குறித்து தெரிவிக்கப்படாது. ஆட்சேபனைகளை சரி செய்த பிறகு நிபுணர்களால் இறுதி செய்யப்படும் விடைகள் இறுதியானவை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை ஜனவரி 21 முதல் 29 வரை ஜே.இ.இ முதன்மை 2026 தேர்வின் முதல் அமர்வை நடத்தியது. ஜே.இ.இ முதன்மை தேர்வு தாள் 2 ஜனவரி 29 அன்று நடைபெற்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




