--- --:--:-- --

8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

3

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எட்டாவது படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டட தொழிலாளி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு வந்தபோது கட்டட தொழிலாளியான ஜெய்கிருஷ்ணன் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகியுள்ளார்.

 

பின்னர் ஆள் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். சிறுமியை காணாமல் தேடிய உறவினர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்து தேடிய காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ஜெயகிருஷ்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon