--- --:--:-- --

7 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை..குற்றவாளிக்கு மரண தண்டனை..!

7

மேற்கு வங்கத்தில் 7 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் பற்றி கடந்த ஆண்டு நவம்பரில் 7 மாத குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

குற்றவாளியை கைது செய்த போலீசார் 26 நாட்களுக்குள் விசாரணையை தொடங்கி குற்ற பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.

 

இந்த நிலையில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 25 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon